தோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 28, 2018 06:14 PM
Girl turned into man to marry the girl she loved, here is what next

தான் மிகவும் விரும்பிய பெண் ஒருவருக்காக, தானும் ஆணாக மாறிய பெண்ணின் செயல் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அர்ச்சனா ராஜ் என்கிற பெண் கடந்த 2017-ஆம்  வருடம் ஆண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருடன் அடிக்கடி உண்டான கருத்து  வேறுபாடு காரணமாக எழுந்த சண்டை சச்சரவுகளால் மனமுடைந்த அர்ச்சனா ராஜ் தன் கணவரை விவாகரத்து செய்தார்.


இந்த சமயத்தில்தான் அர்ச்சனா ராஜூக்கு அவரின் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் நட்பு உண்டாகியுள்ளது. நாளடைவில் அந்த பெண்ணும் அர்ச்சனா ராஜின் அலுவலக கிளைக்கே பணிமாற்றம் அடைந்தவுடன் இருவருக்குமான நட்பு மேலும் நெருக்கமடைந்து ஏறக்குறைய இரண்டு பெண்களிடையேவும் அது காதலாக மலர்ந்தது.


இதே நேரத்தில் அர்ச்சனாவின் புதிய தோழியின் வீட்டில், அவருக்கு திருமணம் நிச்சயம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியதும் அர்ச்சனாவுக்கு பொசசிவ்னஸ் அதிகமாகியுள்ளது. எனினும் தன் தோழியிடம் அர்ச்சனா ராஜ் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுள்ளார்.

 

ஆனால் அந்த பெண்ணோ ‘அதற்கு நீ ஆணாக மாற வேண்டும்’ என்று கூறியுள்ளார். அர்ச்சனாவும், இவ்வளவுதானே? என்கிற ரீதியில் தான் நேசித்த பெண்ணை அடைய தடையாக இருந்த பாலினத் தன்மையை மாற்றும் பொருட்டு, ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டு தன் பெயரையும் திபு என்று ஆணின் பெயராக மாற்றிக்கொண்டுள்ளார்.


அதன் பின்னர் தன் தோழியின் முன்னாள் சென்று நின்ற திபுவை (அர்ச்சனாவை) அந்த பெண் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த திபு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தான் ஆணாகவே வாழ விரும்புவதாகவும் தன்னை போல் யாரும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையை கதையாக எழுதவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags : #LGBT #GENDER #GIRL #LOVE #BIZARRE #KERALA #VIRAL