துரோகம் பண்ணிய காதலனை பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்து பெண் செய்த வைரல் காரியம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 21, 2018 01:42 PM
Is this the right thing to do when your bf cheats on you -Viral Video

மனதுக்கு நெருக்கமாக காதலித்த ஒருவரை பிரேக்-அப் செய்வது என்பது உண்மையாக காதலித்தவர்களுக்கு கடினமான காரியம்தான். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக பலருக்கு அந்த நிலை உருவாகும். அப்படி உண்மையாக காதலித்தவர் ஒரு வகையில் தமக்கு துரோகம் செய்தவர் என்று அறியும்போது உண்டாகும் மனப்போரட்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதுதான்.


ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகள் பலரும் இந்த கொடூரமான மனநிலையைக் கடந்து,  இழந்ததை பற்றி யோசிக்காமல் துணிச்சலாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்கின்றனர். அப்படித்தான் டெக்ஸாஸில் இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்த இளைஞரை தனது  பிறந்த நாளில் பிரேக்-அப் செய்ததோடு, தனக்கு துரோகம் செய்துவிட்டு நிறைய பெண்களிடம் உறவாட முயற்சித்த அந்த இளைஞரது ரகசியங்கள் தெரியவந்ததை அடுத்து, தக்க பாடம் புகட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


டயனா பெர்சோன் என்கிற அந்த பெண், தனது பிறந்த நாள் பார்ட்டியில், பேசும்போதும் தனது அருகிலேயே நின்றுகொண்டிருந்த தன் காதலர் சாண்டோஸை பிரிவதாகவும், தன் பிறந்த நாள் பார்ட்டியை ஏற்றுவந்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

 

உடனே சட்டென தன் காதலர் பக்கம் திரும்பி பார்த்தபடி, ‘ஆனால் என்னையும் என் உயரத்தையும் புரியவைத்த உன்னை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அறிவர். கிடைக்கும் பெண்களிடம் உறவாட முயற்சிக்கும் உன் புத்தியை பலரும் வீடியோ மற்றும் நீ பேசிய மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட் மூலம் எனக்கு காண்பித்துவிட்டனர்’ என்று தன்மையாக பேசி வெளியே செல்லச் சொல்கிறாள்.

 

உடனே அங்கு கூடியிருந்த அனைவரும் அவரின் காதலரை வெளியே செல்லச் சொல்லி ‘அவுட்’ என உரக்கமாக சத்தமிடுகின்றனர். முகத்தில் எவ்வித கஷ்டத்தையும் வலியையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் தன் காதலரை வெளியேறச் சொல்லும் இந்த பெண்ணின் பேச்சும் செயலும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Tags : #LOVE #VIRAL VIDEO #BREAKUP #BOYFRIEND #CHEATING