BGM 2019 All Banner

விமானத்தை தவறவிட்ட பயணியின் வினோத காரியம்: வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 21, 2018 09:31 PM
this enraged passenger fires his luggage after flight cancelled

விமானத்தை தவறவிட்டதால் பயணி ஒருவர் மிகவும் டென்ஷனாகி தான் கொண்டுவந்த பெட்டியை, விமானத்தை தவறவிட்ட ஏர்போர்ட்டிலேயே வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக பற்றிய நெருப்பு போல பரபரப்பாகி வருகிறது. 

 

இஸ்லாமாபாத்தில் இருந்து கில்ஜித் போக முயன்ற அந்த இளைஞர், தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டதால், உடனே டென்ஷனாகி, விமான நிலையத்திலேயே படபடப்பை அடைந்துள்ளார். 

 

இதனை அடுத்து அவர் திடீரென தன் லக்கேஜை தீயிட்டு கொளுத்த தொடங்கியுள்ளார். அதை பார்த்து பதறிப்போய் தடுக்க வந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி கொளுத்தியுள்ளார். பின்னர் அவரை விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தவும், அவருடைய லக்கேஜில் பற்றிய தீயை அணைத்துள்ளனர்.

 

Tags : #VIRAL VIDEO #FLIGHT #PASSENGER #ENRAGED MAN #AIPORT #ISLAMABAD #LUGGAGE #PAKISTANI #PAKISTAN INTERNATIONAL AIRLINES #FRUSTRATION #FLIGHTDELAY