‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 03:24 PM
student handles thief with the gun in petrol bunk goes viral

துப்பாக்கி முனையில் திருடன் ஒருவன் தன்னிடம் வந்து பயமுறுத்தும்போது, அந்த திருடனை சாதூரியமாக எதிர்கொண்ட மாணவனது செயல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி வைரலாகி வருவதோடு, மாணவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

டெல்லியில் உள்ள ஷாஹாதாராவில் உள்ள பெட்ரோல் பங்கில் அதிகாலை 6 மணிக்கு இந்த மாணவனிடம், திடீரென பதுங்கியிருந்து எழுந்து வந்த திருடன் ஒருவன் துப்பாக்கியை நீட்டி, துப்பாக்கி முனையில் மாணவனிடம் பைக் சாவியை தருமாறு மிரட்டியுள்ளான். 

 

ஆனால் சாதூரியமாக அந்த திருடனிடம் இருந்து மாணவன் துணிச்சலுடன் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளான். அந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. முதலில் சாமானியமாக துப்பாக்கியை கைப்பற்ற முடியாமல், பின்னர் எப்படியோ துப்பாக்கியை கைப்பற்றியதும், திருடன் பெட்ரோல் பங்கின் அருகில் ஓடி ஒளிந்துகொண்டதாகவும், அதற்கு முன் அந்த திருடன் அங்கிருந்த ஊழியர்களிடம் உதவி கேட்டதாகவும் மாணவன் கூறியுள்ளான். 

Tags : #CCTV #STUDENT #BIZARRE #GUN #VIRALVIDEO #THIEF