தலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 31, 2018 01:35 PM
TamilNadu Private Bus gets Accident after driver lost his control

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைகீழாக கவிழ்ந்ததால் பேருந்தில் பயணம் செய்த பலரும் படுகாயம் அடைந்தனர். இதில் பேருந்து முற்றும் முழுதாக தலைகீழாய் கவிழ்ந்துள்ள சம்பவம் பலரிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்மங்குளம், அரசடிபட்டி வழியாக மணிப்பள்ளம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருபுறமும் மரங்கள் இருந்த காட்டுவழிப்பாதையில் சரிந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. 

 

இதனால் பேருந்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்  அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags : #BUS ACCIDENT #TAMILNADU #BIZARRE