'பந்தை பிடிக்க நடந்த ஓட்ட பந்தயம்'...ஜெயிச்சது யாரு?...பிசிசிஐ வெளியிட்ட சுவாரசியமான வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 01, 2019 02:19 PM
BCCI,One of the most viewed videos from 2018 - The running race

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜாவும்,கேப்டன் விராட் கோலியும் பந்தை பிடிக்க ஓடிச் சென்ற வீடியோவை  #BestOf2018-இல் பிசிசிஐ பதிவிட்டுள்ளது.

 

மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளை விளையாடியது . டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடர் 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது

 

அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ஹேம்ராஜ் அடித்த ஷாட்டில் பந்தை பிடிக்க ஜடேஜாவும், விராட் கோலியும் தீவிரமான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர், அந்த ஓட்டப்பந்தயத்தில் கோலியை முந்திச்சென்று ஜடேஜா பந்தை கைப்பற்றினார்.

 

இந்த வீடியோவை பிசிசிஐ, #BestOf2018 என்ற ஹேஸ்டேக்கில் 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.