‘இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக’ தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 28, 2018 07:19 PM
Unemployed youngster kills his own father, here is the reason

படித்துவிட்டு வேலை இல்லாமல் இளைஞர்கள் சுற்றிக்கொண்டிருந்தால், மகன் மீதும் மகனின் வாழ்க்கை மீதும் அக்கறை கொண்ட எந்த பெற்றோர்களும் அதை விருப்பத்துடன் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிந்ததுதான். எனினும் இது புரியாமல், மகன் ஒருவர் தான் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததை பற்றி கேட்ட தனது தந்தையையே கொன்றுள்ளார்.


திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் டிப்ளமோ பாலிடெக்னிக் படித்த விக்னேஷ். படிப்பு முடிந்தும் வேலைக்கும் செல்லாமல், தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தும், வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்தும் வந்துள்ளார்.


இந்நிலையில் படித்துவிட்டு வேலைக்கும் செல்லாமல், தன்னிடம் அடிக்கடி பணத்தையும் பெற்றுக்கொண்டு, இளம் பெண்ணை காதல் செய்கிற பெயரில் பொழுதை போக்கிக்கொண்டு இருப்பதாக விக்னேஷ் மீது அவரது தந்தை சுந்தரராமன் விமர்சனம் வைத்து வாக்குவாதம் செய்துள்ளார்.


இதனால் ஆத்திரப்பட்ட விக்னேஷ் தந்தை என்று பாராமல் சுந்தரராமனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு  கொன்றதாக கூறப்பட்டதை அடுத்து தண்டராம்பட்டு காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் சுந்தரராமனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #FATHER #SON #LOVE #UNEMPLOYMENT