‘சதம் அடிச்சா இப்படி ஒரு ஆஃபர் தரேன்’.. வம்பிழுத்த வீரருக்கு பதிலடி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 30, 2018 12:53 PM
If he gets a hundred here, We\'ll buy him for our IPL Team, says Rohit

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளுக்கு நாள் பரபரப்பாகவும் ட்ரெண்டிங்காகவும் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய பேச்சுக்களை ஜாலியாக பேசுவது அவ்வப்போது வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக இந்திய வீரர் ரோகித் ஷர்மாவிடம் வம்பிழுத்த டிம் பெய்ன், ரோகித் சிறப்பாக ஆடினால் தான் மும்பைக்கு மாறிவிடுவதாக கூறியிருந்தார். ஆனால் அதன் பின் சிறப்பாக விளையாடிய ரோகித்,  ‘டிம் பெய்ன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தால், நான் எனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி பரிந்துரைத்து அவரை அணியில் இடம் பெறச் செய்வேன், அவரைப் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர் போல தெரிகிறது’ என்று பதிலுக்கு சவால் விட்டு கலாய்த்திருக்கிறார்.

 

ஆனால் சதம் அடிக்க முடியாத டிம் பெய்னை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.  மேலும் ரோகித்தின் பதிலடியை புகழ்ந்தும் வருகின்றனர்.

Tags : #TEAMINDIA #ROHITSHARMA #MUMBAIINDIANS #IPL #AUSVIND #TIMPAINE #SCOREAHUNDRED #MELBOURNETEST