இந்திய பந்து வீச்சாளர்களை புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 30, 2018 12:15 PM
Australia Test Cricket Team Captain Tim Paine Praises Indian Bowlers

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட்  போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாண்டதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டித் தொடரில் இந்திய அணி 399  ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.


இந்நிலையில் பேசிய, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், தங்களது இந்த தோல்வி ஏமாற்றத்தை தழுவியதாகவும், எல்லாரும் சொல்வதுபோல இது மோசமான பிட்ச் அல்ல. சிறந்த பிட்ச். தாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சை தான் தேர்ந்தெடுத்திருப்போம் என்று கூறியவர், எனினும் தாங்கள் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு  எதிராக விளையாடியதாகவும் குறிப்பிட்டார்.

Tags : #AUSVINDIA #TEAMINDIA #MELBOURNETEST #TIMPAINE