‘என்னா அடி’.. அதிக சதம் அடித்து 7வது இடத்துக்கு முன்னேறிய ’தெறி’ வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 03, 2019 03:44 PM
Sydney Test - Indian Cricketer Scores his 3rd century in the series

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான,  கடைசி டெஸ்ட் போட்டிகள் சிட்னியில் துவங்கின.  முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய, தொடரில் 2-1  என்கிற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. தொடக்க ஆட்டக்காரரான மயன்க் அகர்வால், லயனின் பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள் அடித்து 77 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகினார்.


பின்னர் வந்த புஜாராவும், கோலியும்  ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதில் புஜாரா அடித்த சதம்  அணியின் வெற்றிவாய்ப்பை உயர்த்தியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு 90 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்திருந்த இந்திய அணியில் புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இந்தத் தொடரில் இது புஜாராவின் 3-வது சதம் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 18வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலின் 7வது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Tags : #PUJARA #CRICKET #SYDNEYTEST #AUSVIND #BCCI #VIRATKOHLI