'கடைசி டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியல்'...இவர் இல்லன்னா எப்படி?...கலக்கத்தில் இந்திய அணி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 02, 2019 11:38 AM
BCCI Announced 13-Man Squad For Sydney Test

ஆஸ்திரேலியவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

 

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் துவங்கவுள்ளது.அடிலெய்ட் டெஸ்டில் காயமடைந்து வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்,அதன் பின்பு நடைபெற்ற மெல்பெர்ன் மற்றும் பெர்த் டெஸ்ட்டில் ஆடவில்லை.காயம் குணமடைந்ததால் மெல்பெர்ன் டெஸ்ட்டில் இடம் பெற்றிருந்த,ஜடேஜா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

 

இந்நிலையில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.இதில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் டாஸுக்கு முன்பு நடத்தப்படும் உடற்தகுதி தேர்விற்கு பின்புதான் அஸ்வின் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

இந்தியா இந்தத் தொடரில் ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.