'இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் செம ஹாப்பி அண்ணாச்சி'...ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு...'கேப்டனான இந்திய வீரர்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 02, 2019 10:27 AM
Cricket Australia names ODI XI of 2018:Virat Kohli named captain

2018ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு இந்திய வீரர் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது,இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கியிருக்கும் 2019-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக அமையவிருக்கிறது.காரணம் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட், இந்தியன் பிரீமியா் லீக், ஆஷஸ் தொடா் என முக்கியத்துவம் வாய்ந்த பல போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.அதுமட்டுமல்லாமல் 2018-ம் ஆண்டு இந்திய அணிக்கு இனிப்பான ஆண்டாகவே அமைந்தது.

 

இதனிடையே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2018ம் ஆண்டில் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்து அசத்தி உள்ளனர்.இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.அதோடு 2018ம் ஆண்டில் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1030 ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா மற்றும் பௌலர்கள் பும்ரா மற்றும் குல்தீப் யாதவும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

 

ஆஸ்திரேலியா லெவன் அணியின் விவரம் :

ரோகித் ஷா்மா (இந்தியா), ஜானி போ்ஸ்டோவ் (இங்கிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), விராட் கோலி (கேப்டன், இந்தியா), ஷிம்ரோன் ஹெட்மைா் (மேற்கு இந்திய தீவுகள்), ஜோஸ் பட்லா் (இங்கிலாந்து,), திசாரா பெரேரா (இலங்கை), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), முஸ்டாபிசூா் ரஹ்மான் (வங்கதேசம்), ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா)

 

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #ROHIT SHARMA #JASPRIT BUMRAH #CRICKET AUSTRALIA #ODI XI OF 2018