அடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 10:41 PM
TN Traffic police cancels almost 236 license for drunk and drive

2019-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த புதுவருடத்தை வழக்கத்தைப் போலவே கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் பஞ்சமில்லாமல் பலரும் மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர். முன்னதாக வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.


எனினும் புதுவருடம் அன்றுமாக மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் நேர்ந்துள்ள விபத்துக்கள் பலரின் குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  புதுவருட நாளில், நேர்ந்துள்ள 25 விபத்துக்களில் சுமார் 7 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இதுவரை 263 வாகன ஓட்டிகளின் வாகன உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : #TAMILNADU #POLICE #TNPOLICE #DRUNKANDDRIVE #NEWYEAR2019