உயிருக்கு போராடிய தந்தை.. மகனும் மகனின் காதலியும் நள்ளிரவில் எடுத்த முடிவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 20, 2019 12:58 PM

உயிருக்கு போராடிய நிலையில் தந்தை இருக்க, அவரது ஆசீர்வாதத்தை பெற நள்ளிரவில் தன் காதலியை மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சென்னையில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

In Midnight guy marries a girl at Hospital before Father\'s Operation

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சுதேஷ் என்கிற 60 வயதான நபர் ரயிலில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இவரது மனைவி மல்லிகாவும், மகன்கள் பிரகாஷ், சரவணன், சதீஷ் ஆகியோரும்தான் இவரது குடும்பத்தினர். இதில் மகன் சதீஷ் என்பவருக்கு அவர் காதலித்த சித்ரா என்கிற பெண்ணுடன் இருவீட்டார் சம்மதத்துடன் வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் சுதேஷின் இடுப்புக்கு மேல் ரயில் ஏறியதால் நுரையீரலும், அவரது இரண்டு கால்களும் செயலிழந்துவிட்ட நிலையில், அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆபரேஷனில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்துவிடுமோ என்கிற பயத்தில் தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று சதீஷ் தன் காதலியை அப்பாவின் கண்முன்னே, அவரது ஆபரேஷன் நப்பதற்கு முன்பாக நள்ளிரவில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,மகன் சதீஷ் தன் திருமணச் செலவுகளைத்தான் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காக கொடுத்துள்ளார். நெகிழவைக்கும் இந்த சம்பவத்துக்கு பிறகு உறவினர்களும், புதுமணமக்களும் தந்தை சுதேஷின் உடல்நிலை பூரணமாக குணமாக வேண்டும் என்கிற சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : #TRAINACCIDENT #FATHER #HOSPITAL #CHENNAI #MARRIAGE #SON #BIZARRE