குடிபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர்.. துண்டான குழந்தை.. கொடூர சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 13, 2019 01:43 PM

ராஜஸ்தானில் போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ பணியாள்  குழந்தையின் உடலினை பிடித்து இழுத்ததில் தலை தனியே உடல்  தனியே பிரிந்த கொடூர சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சி பேரலையில் மூழ்கடித்துள்ளது.

baby dead after drunken male nurses pulled the baby with such force

ராஜஸ்தான் ஜெய்சல்மர் பகுதியில் பிரசவ வலியால் துடித்தப் பெண்ணை, அப்பெண்ணின் கணவர், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் கொண்டு சேர்த்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லாத அச்சமயத்தில் போதையில் இருந்த மருத்துவ பணியாள் ஒருவர் உதவியாளருடன் அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.

போதையில் நிலை தடுமாறிய அந்த பணியாள் தாயின் கருவில் சிசுவாய் இருந்த அந்த குழந்தையின் உடலைப் பிடித்து வேகமாக இழுத்திருக்கிறார். இதனால் குழந்தையின் தலை தாயின் வயிற்றிலேயே மாட்டிய நிலையில் உடல் மட்டும்  அவரின் கையோடு வந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ந்த மருத்துவ பணியாள், தன் உதவியாளருடன் சேர்ந்து குழந்தையின் உடலை பிணவறையில் மறைத்து வைத்துள்ளார்.  பின்னர் அந்தப் பெண்ணின் கணவரிடம் பிரசவம் மிகவும் சிக்கலாக இருக்கிறது. எனவே ஜோத்பூர் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சேர்த்து விடுவது நல்லது என்று அறிவுரை கொடுத்துள்ளனர்.

உடனே மயக்கத்தில் இருந்த தன் மனைவியை, அந்த கணவர் அதிவிரைவாக ஜோத்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரின் உடலைப் பரிசோதித்த ஜோத்பூர் மருத்துவர் அந்தப் பெண்ணின் கருவில் குழந்தையின் தலை மட்டும் இருப்பதைப் பார்த்து அச்சத்தில்  உடனடியாக அந்தப் பெண்ணின் கணவரிடம்  சொல்ல, குழந்தையின் உடல் எங்கே என குழப்பத்தில் போலிஸிடம் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்பு போலிஸார் விசாரணையில் ஜெய்சல்மர் அரசு சுகாதார நிலையத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பணியாளர்களை கைது செய்வதற்கான விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

Tags : #DELIVERY #HOSPTIAL #RAJASTHAN #DRUNK #BIZARRE #BABY #CRIME