கள்ளக்காதலை தட்டிக் கேட்ட தாய்க்கு மகள் கொடுத்த பரபரப்பு தண்டனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 11, 2019 06:30 PM

சென்னையில் தகாத உறவு வைத்திருந்ததைக் கண்டித்த தாயை  மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த மகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

daughter sets mother on fire after mother asked about her affair

சென்னை தாம்பரம்  சானடோரியம் அருகில் துர்கா  நகரில் பூபதி (60) எனும் பெண்மணி தன் மகள் நந்தினியுடனும்  (27) நந்தினியின் இரண்டு குழந்தைகளுடனும் வசித்து வந்தார். கடந்த 6 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த முருகன் (49) என்பவருடன் நந்தினி தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த  தாய் பூபதி தன் மகளைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தூங்கிக்கொண்டிருந்த தாய் பூபதியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு, தனது தற்கொலைக்கு முயற்சித்ததாக நாடகமாடிய பிறகு தாய் பூபதியை, 70 சதவீதம் எரிந்த நிலையில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பின்னர் மேற்கொண்டு சிகிச்சைக்காக பூபதியை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி தாய் பூபதி உயிரிழந்துள்ளார். அதன்பின் சந்தேகத்தின்பேரில் மகள் நந்தினியை போலீசார் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, முருகனுடனான தகாத உறவுக்கு, தனது தாய் பூபதி தடையாக இருந்ததால்,முருகனின் ஆலோசனைப்படி தாய் பூபதியை மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்ததாக நந்தினி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நந்தினி கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனை கைது செய்த பின் நந்தினி மற்றும் முருகன் ஆகிய இருவர் மீதும் பிரிவு எண் 302-ன் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தகாத உறவைத் தட்டிகேட்ட தாயை, மகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #CRIME #MURDER #CASE #YOUTH #MOTHER