‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 01:15 PM
father was caught trying to bury his infant alive - Bizarre incident

பெற்ற மகனையே தந்தை ஒருவர் ஈவு இரக்கமின்றி உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சிப் பேரலையை உண்டுபண்ணியுள்ளது. ஸ்ரீ நகரில் பழைய நௌவ்ஹட்டா என்னுமிடத்தில் மன்ஸூர் ஹுசைன் பியரி என்பவர்தான் மேற்கண்டவாறு, தனது பிஞ்சு ஆண் குழந்தையை உயிரோடு புதைக்க முயற்சித்துள்ளார். பின்னர் பச்சிளம் குழந்தையினை உயிருடன் புதைக்க முயன்ற கொடூரமான சம்பவம் செய்ததற்காக, கொலைமுயற்சி வழக்கில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


இவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் போது, அக்குழந்தை சில குறைபாடுடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தையாக பிறந்ததாக கூறப்படுகிறது. எனினும் அக்குழந்தையின் இவ்விதமான குறைபாடுகளை பின்னாட்களில் குணப்படுத்தவும் முடியாது என்கிற உண்மை தெரிந்தவுடன், கொஞ்சம் கூட குழந்தையின் மீது கரிசனம் இல்லாமல் இவ்வாறு செய்துள்ளார் இந்த தந்தை. 

 

ஆனால், உண்மையில் இது குழந்தையின் மீதான கருணையினால் வந்த யோசனை இல்லை என்றும் தன் சுயநலமான கவுரவத்துக்காகவும், இப்படி ஒரு குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்குவது என்கிற கோழைத்தனமான யோசனையினாலும், அந்த பச்சிளம் ஆண் குழந்தையினை உயிருடன் புதைக்க முயற்சித்துள்ளார் குழந்தையின் தந்தை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தெரிய வந்ததும், போலீஸ் இரக்கமற்ற இந்த தந்தையை கைது செய்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதோடு, ஸ்ரீ நகர் குழந்தைகள் நலவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : #INFANT #FATHER #MERCILESS #BABY #SRINAGAR #BIZARRE #CRIME #POLICE