‘இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்’.. இளைஞர்கள் சிங்கத்தை படுத்தும் பாடு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 12:50 PM
three men were caught on camera harassing a pride of lions by chasing

பொதுவாகவே சிங்கம் கர்ஜனை மிக்க விலங்கு மட்டுமல்லாது, காட்டுராஜா என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சிங்கத்தின் பிடறியை பிடித்தால் கூட உயிருடன் திரும்புவது உறுதியான காரியமல்ல. ஆனாலும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து சிங்கங்களை பைக்கில் துரத்தும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

குஜராத் மாநிலம் ஆம்ரேலி மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மூன்று இளைஞர்கள் பைக்கில் சென்றபடி சிங்கங்களைத் துரத்திச் செல்வதும் அதை ஒருவர் வீடியோ எடுத்து வருவதும் போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலனாது.

 

இவ்வாறு இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிங்கங்களை துரத்திய இளைஞர்கள் மீது  வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது விசாரித்து வருகிறது.

Tags : #GUJARAT #YOUNGSTERS #ANIMALS #WILDLIFE #LION #VIRALVIDEOS #BIZARRE