‘பந்தை வாங்கி கோலி செய்த காரியம்’.. கடுப்பான அம்பயரின் வைரல் ரியாக்‌ஷன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 03, 2019 07:23 PM
Umpire gets tempered after Kohli\'s act with the ball viral video

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங் அகர்வால் 77 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தபோது
களமிறங்கிய கோலி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சினை முதலில் நிதானமாகவே எதிர்கொண்டார்.

 

ஆனால் ஹேசில்வுட்டின் கடுமையான பந்துவீச்சினை, எதிர்கொண்ட கோலி லெக் சைடில் பவுண்டரி அடிக்க முயன்று பேட்டை சுழற்றியுள்ளார். அதனால் பேட்டின் எட்ஜில் பந்து பட்டு, பின்னாலிருந்த பெய்னிடம் சென்றது.

 

பின்னர், 52-வது ஓவரின் முடிவில், அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கி, மேலே தூக்கிப்போட்டு, தனது ‘பிங்க்’ பேட் கொண்டு அடித்து விளையாடத் தொடங்கிவிட்டார் கோலி. அதனை பார்த்ததும் கடுப்பான அம்பயர் உடனே கோலியிடம் இருந்து பந்தை பிடுங்கிக்கொண்டார். கோலியின் இந்த விளையாட்டான செயல் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIRATKOHLI #VIRALVIDEOS #TWITTER #UMPIRE #AUSVIND #SYDNEYTEST #TEAMINDIA #BCCI