‘நண்பனிடம் ஆசையாக துப்பாக்கியை காட்டியபோது நடந்த விபரீதம்.. தற்கொலை செய்த சிறுவன்!’

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 03, 2019 11:52 AM
teen commits suicide after he accidentally shot his friend using gun

தவறுதலாக நண்பனை சுட்டுவிட்டதால், போலீஸுக்கு பயந்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவனது செயல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் வசித்து வந்த 15 வயது சிறுவன் டெவின் ஹோட்ஜை பார்க்க அவரது நண்பர்கள் 3 பேர் சிறுவனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

 

நண்பர்களுக்கு ஹோட்ஜ் தனது வீட்டில் இருந்த விசைத் துப்பாக்கியை காட்டியுள்ளான். அப்போது அதன் விசையை தெரியாமல் அழுத்திவிட்டதால்,  அருகில் இருந்த இன்னொரு நண்பனான சாத் கார்லெஸ் என்கிற 17 வயது சிறுவனின் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சாத் கார்லெஸ் உயிரிழந்தான்.


உடனே மற்ற 2 நண்பர்களும், பயந்து ஓடியுள்ளனர். விஷயம் போலீஸுக்கு தெரிந்தால் தனக்கு மரணதண்டனைதான் என பயந்து டெவின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags : #GUNSHOT #MURDER #CRIME #YOUNGSTERS #BOYS #BIZARRE