போன் பேசிக்கொண்டே போய் கிணற்றில் விழுந்த பெண்.. காப்பாற்ற வந்தவர்களுக்கும் நடந்த பரிதாபம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 09, 2019 12:44 PM

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரைச் சேர்ந்தவர் சங்கீதா.  அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சங்கீதா, தன் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து பிரிந்து அதே பகுதியில் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

woman falls down inside well while talking in cellphone goes bizarre

இவர் நேற்று மாலை தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றுக்கு அருகே போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். ஆனால்  போன் பேசிக்கொண்டெ நடந்தபோது கிணறு இருந்ததை கவனிக்காமல் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் சங்கீதாவை காப்பாற்ற அங்குவந்த சுப்ரமணியன் மற்றும் கதிரேசன் இருவரும் குதித்துள்ளனர்.

ஆனால் காப்பாற்றும் நோக்கில் குதித்த இருவரும் சங்கீதாவை மீட்டு மேலே வரமுடியாமல் தத்தளித்துள்ளனர். இதனைப் பார்த்த ஊர்மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்துள்ளனர். தீயணைப்பு படையினர் வந்த பின்னர் மூவரும் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : #BIZARRE #WOMAN #WELL #TAMILNADU #ERODE