தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 08, 2019 02:00 PM

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

CM announces that Kallakurichi will be separate district in Tamil Nad

முன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற தகவலையைடுத்து பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மக்கள்  ஆர்வத்துடன் இருந்தனர். 

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்கிற தாலுகா, இனி மாவட்டமாகிறது என்று தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இருக்கும் என்று அறியப்படுகிறது.

Tags : #EDAPPADIKPALANISWAMI #KALLAKURICHI #NEWDISTRICT #TAMILNADU #VILUPPURAM