பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 07, 2019 03:12 PM
Court Verdict in the case of Men force School girls into prostitution

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளிச்சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களுக்கு கடலூர் நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. இந்த செய்தி அம்மாவட்ட பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் என பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடியில் 2 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபத்திய 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்.


இதில் பள்ளிக்கு செல்லும்  மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக கலா மற்றும் தனலட்சுமி ஆகிய இரு பெண்மணிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இத்தகைய குற்றங்களை முதன்மையாகவும் தலைமையாகவும் இருந்து செய்துள்ள, முக்கிய குற்றவாளியான அருள்தாஸ் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பும், மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய செயலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #TITTAGUDI #PROSTITUTION #SCHOOLGIRLS #TAMILNADU #COURT #VERDICT #JAIL