அடுத்த ஒருநாள், டி20 போட்டிகளில் ‘அவர் விளையாடமாட்டார்.. அவருக்கு பதில் இவர்’.. பிசிசிஐ அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 08, 2019 01:36 PM
This Indian player will take rest in next T20 and ODI series,Says BCCI

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாண்ட டெஸ்ட் போட்டிகள் தற்போதே முடிவடைந்தன. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து அதிரடியாக பும்ரா நீக்கப்பட்டுள்ளார் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன்படி வரும் 12-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பும்ராவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.


3-ம் நாள் டெஸ்ட் தொடரில், மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வெற்றி பெற்றதில், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #JASPRIT BUMRAH #AUSVIND #CRICKET #ODI #AUSTRALIA #NEWZEALAND #TEAMINDIA #VIRATKOHLI #BCCI