‘இது உடம்பா இல்ல உடும்பா?’ சிட்னி மைதானத்தையே அலறவிட்ட இந்திய வீரர்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 05:07 PM
Viral video of his athletic talent is proof for the Indian cricketer

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டியில்,  இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 2-வது முறை சதம் அடித்த புகழைப் பெற்றுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் தற்போது கூடுதலாக சிறந்த உடலுறுதியுடன் கூடிய இளம் வீரர் என்கிற பெருமையை பெறும் வகையில் வெளியான ஒரு வீடியோ மூலம் ட்ரெண்டாகி வருகிறார்.  சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது ரிஷப் பண்ட், தான்  ‘படுத்திருந்த பொசிஷனில் இருந்து ஜிம்னாஸ்டிக் செய்து கண்ணிமைக்கும் நொடியில் எழுந்ததுதான்’  இத்தகைய பாராட்டுக்கு காரணம்.

 

இந்த உடல் உறுதிதான் இந்த இளம் வயதில் அவரது துடிப்பான விளையாட்டுக்கும், அதிக ரன்களுக்கும் ஒத்துழைப்பு தருவதாக பலரும் ரிஷப்பினை புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #AUSVIND #RISHABHPANT #VIRALVIDEO #VIRALCLIP #BCCI #SYDNEYTEST