உலகக்கோப்பையில் ''தல தோனி'க்கு டப் கொடுக்கும் வீரர்''...இரண்டு பேரில்...யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 03, 2019 08:42 PM
MS Dhoni or Rishabh Pant,who will get chance to play in World Cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தோனி அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.ஆஸ்திரேலிய சுற்று பயணத்தை முடித்து விட்டு,நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக கோப்பை போட்டிகள்,வரும் மே மாதம் இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது.இந்த போட்டிகள் வருகின்ற மே 30-ம் தேதி துவங்கி ஜூன் 14,வரை நடக்க இருக்கின்றன.மொத்தம் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடைபெற இருக்கிறது.

 

இந்நிலையில்,வரும் உலக கோப்பை போட்டிகளில் தோனி இடம் பெறுவாரா என்ற கேள்வி பரவலாக எழ தொடங்கியுள்ளது.காரணம் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் பார்ம் சரியாக இல்லை என்ற,விமர்சனம் பலராலும் வைக்கப்பட்டு வருகிறது.இதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்தை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இருப்பினும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் தோனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதால்,தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் தேவைப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால் தோனி நிச்சயம் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என,கிரிக்கெட் விமர்சகர்கள் உறுதிபட தெரிவித்திருக்கிறார்கள்.

Tags : #MSDHONI #CRICKET #BCCI #RISHABH PANT