'சச்சினைவிட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்'...இப்படி சொன்னதற்காக இரு வீரர்களையும்...ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்! வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 07, 2019 09:26 PM
Hardik Pandya, KL Rahul pick Kohli as better batsman over Sachin troll

'காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினா,கோலியா என்ற கேள்விக்கு கோலி என பதிலளித்தற்காக கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

 

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை இயக்குனர் கரண் ஜோக்கர் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள்,பிரபல கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பங்கேற்று இருக்கிறார்கள்.இந்த  நிகழ்ச்சியின் நேற்றைய எப்பிஸோடில்,இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

 

இதில் கேள்வி,பதில்-சுற்றில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினா இல்லை விராட் கோலியா என கேட்கப்பட்டது, இதற்கு சிறிது தயங்காமல் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கோலியின் பெயரை குறிப்பிடட்டனர்.இதனால் கடுப்பான நெட்டிசன்கள் இருவரையும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

Tags : #HARDIKPANDYA #KLRAHUL #CRICKET #VIRATKOHLI #SACHIN TENDULKAR #KOFFEE WITH KARAN