'இவர பாக்கும் போது,கில்கிறிஸ்ட பாக்குறது மாதிரியே இருக்கு'...இந்திய வீரரை...புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 05, 2019 11:52 AM
Rishabh Pant is another Adam Gilchrist says Ricky Ponting

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர்  ரிஷப் பண்ட்,மற்றோரு ஆடம் கில்கிறிஸ்ட் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி,தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்கேளா் செய்தது.

 

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார்,இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.அதோடு ஆஸ்திரேலியவிற்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பன்ட் படைத்தார்.இதனால் அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வகையில்,ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட் குறித்து மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

 

இது குறித்து பாண்டிங்  கூறுகையில் "ரிஷப் பண்ட் மிக துல்லியமான கிரிக்கெட் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்கிறார்.பந்துகளை மிக துல்லியமாக எதிர்கொள்ளும் திறன் அவரிடம் நிறையவே இருக்கிறது.21 வயதே ஆன பண்ட் தனது 9வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூா்த்தி செய்துள்ளாா். இரண்டுமுறை 90 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழந்துள்ளாா். இதன் மூலம் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை எளிதாக முறியடிக்கலாம்.

 

மேலும் அவரை.நான் மற்றொரு ஆடம் கில்கிறிஷ்ட்டாகவே பார்க்குறேன் என  ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #MSDHONI #INDIA VS AUSTRALIA #ADAM GILCHRIST #RICKY PONTING #RISHABH PANT