'இந்தா வந்துட்டேன் ல'...பிளைட் ஏறிய 'தல'...உற்சாகத்தில் இந்திய வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 07, 2019 08:19 PM
MS Dhoni, Rohit Sharma depart for Australia for ODI series

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக,தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியவிற்கு கிளம்பினர்.தோனி வீரர்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.இந்த போட்டியில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்தியா இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

 

72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளதால்,இந்திய ஆணி வீரர்கள் படு உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரோகித் சர்மா, கேதர் ஜாதவ், கலீல் அஹமது ஆகியோர் இன்று ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றனர். இந்திய அணி வீரர்களுடன் தோனி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Off to Australia ✈️ @mahi7781

A post shared by Khaleel Ahmed (@khaleelahmed13) on

Tags : #MSDHONI #CRICKET #BCCI #INDIA VS AUSTRALIA #ODI