‘அந்த பேபிசிட்டர் போட்டோவா.. அது இப்படி ஒரு சுவாரஸ்யமான சமயத்தில் எடுத்தது’.. பெய்ன் சொல்லும் சீக்ரட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 06:12 PM
Paine Reveals the story behind Rishabh Pant\'s viral babysitter photo

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்டின் 3-வது நாள் போட்டியில் ரிஷப் பன்ட் விளையாடியபோது அவரிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் வம்பிழுத்திருந்தார். அப்போது, பெய்ன் தனது சகவீரர் பின்ச்சிடம், ரிஷப் பண்ட்டை சுட்டிக்காட்டி‘பின்ச், தோனி ஒருநாள் தொடருக்கு  தேர்வாகியதால், ரிஷப் ஆஸ்திரேலியாவின் அபார்ட்மெண்ட்டில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.  நான் அவரை டின்னருக்கு  கூட்டிப்போகிறேன்’ என்று கூறினார். 

 

பிறகு, ரிஷப்பை பார்த்து,  ‘ரிஷப் எனது குழந்தைகளை பார்த்துக் கொண்டால்,  நான் என் மனைவியுடன் சினிமாவுக்கு போவேன். பார்த்துக்கொள்கிறீர்களா?’ என்று வம்பிழுத்தார்.  ஆனாலும் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ரிஷப் விளையாடினார். பின்பு ரிஷப்பும் பதிலுக்கு கிண்டலடித்திருந்தார். அதன் பின், பெய்னின் மனைவி மற்றும் பெய்னின் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து தான் ஒரு சிறந்த பேபி சிட்டர் என்று நிரூபித்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.  

 

இதற்கு பதில் அளித்துள்ளார் டிம் பெய்ன். அதன்படி, இது ஒரு சுவையான சம்பவம் என்றும், அனைவரும் பிரதமர் வீட்டுக்கு சென்றபோது, டிம் பெய்னின் மனைவியிடம் ரிஷப் பண்ட் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு குழந்தையுடன் எடுத்த புகைப்படம்தான் அது என்றும் கூறியுள்ளார்.  அதைத்தான் டிம் பெய்னின் மனைவி, ரிஷப் பண்ட் ஒரு 'சிறந்த பேபிசிட்டர்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்துள்ளார்.

Tags : #RISHABHPANT #VIRALPHOTO #BABYSITTER #TIMPAINE #AUSVIND #BCCI #TEAMINDIA