நம்ப முடியுதா? சைக்கிள் மோதி டேமேஜ் ஆன கார்.. ஒண்ணுமே ஆகாத சைக்கிள்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 05:34 PM
viral photo features a car\'s front bumper damaged by a bicycle

எங்கேயாவது சைக்கிள் மோதி கார் டேமேஜ் ஆகுமா? நிச்சயம் வாய்ப்பில்லை. அப்படியே ஆனாலும் சைக்கிளும் டேமேஜ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சைக்கிள் மோதி காரின் முன் பக்க பம்பர் பலத்த அடிவாங்கி டேமேஜ் ஆகியுள்ள சம்பவம் சீனாவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

தெற்கு சீனாவின் ஷென்ஸென் மாகாணத்தில் நடந்துள்ள இந்த வைரல் சம்பவம் புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதனை போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கூறிவந்தனர். ஆனால் அடுத்து வெளியான வீடியோ இந்த சம்பவம் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

 

உண்மையில் கார் அவ்வளவு வீக்கா அல்லது சைக்கிள் அவ்வளவு ஸ்ட்ராங்கா என்பது தெரியவில்லை. ஆனால், காருக்குத்தான் டேமேஜ் அதிகம். சைக்கிள் மிகவும் ஸ்ட்ராங்காக நிற்கிறது. இந்த விபத்தில் கார் ஓட்டியவருக்கு காயம் இல்லை. சைக்கிளை ஓட்டிவந்தவருக்கு மட்டும் லேசான காயங்கள் உண்டானது. இந்த புகைப்படம் இணையவாசிகளை குழப்பி வருகிறது.

Tags : #CAR #CYCLE #ACCIDENT #VIRALVIDEO #CHINA #VIRALPHOTO #DAMAGE #MYSTERY #BUZZ