வெற்றியில் நெகிழ்ந்துபோய் கோலியை ஆரத்தழுவிக்கொண்ட அனுஷ்கா ஷர்மா.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 07, 2019 05:30 PM
Team India does Dance and Anushka sharma hugs kohli goes viral

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டில் தொடங்கி, பெர்த், மெல்போர்ன், சிட்னி வரையிலான ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாண்டது இந்திய அணி.

 

விராட் கோலியின் தலைமையிலான இந்த அணிதான், 37 வருடங்களுக்கு பிறகு மெல்போர்னிலும் 72 வருடங்களுக்கு பிறகு சிட்னியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி சாதனை புரிந்துள்ள இளம் அணி. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய அணி, சிட்னி மைதானத்தில் ஆட்டமாடிய வீடியோ வைரலானது.

 

மேலும் இந்தியா வெற்றியடைந்த தருணத்தை அனைவரும் நெகிழ்ந்து கொண்டாடி தீர்த்த உணர்வு பூர்வமான தருணங்களும் இந்த வீடியோவில் அடங்கியுள்ளன. அதில் இந்த வெற்றியினால் மிகவும் நெகிழ்ந்துபோன கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கோலியை ஆரத்தழுவி தன் அன்பையும் வாழ்த்தினையும் ஒருசேர வெளிப்படுத்தும் சில நொடிகள் பலரையும் கவர்ந்துள்ளன.

Tags : #INDVAUS #AUSVIND #VIRATKOHLI #ANUSHKASHARMA #BCCI #SYDNEYTEST