72 வருடங்களில் முதல்முறை, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 07, 2019 10:51 AM
India makes its first ever test series victory in Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பெர்த், மெல்போர்ன் மைதானங்களுக்கு அடுத்து சிட்னியிலும் நடைபெற்றது. 

 

ஆனால் சிட்னியில் நடைபெறவிருந்த 4 -வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி 316 ரன்களில், 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

 

இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்கிற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில், புஜாரா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

1947-ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பிறகான இந்த 72 ஆண்டுகளில் 2-1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரை கைப்பற்றி இந்தியா முதல்முறையாக வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது.

Tags : #AUSVIND #BCCI #INDIA #WINNING #TESTSERIES #TEAMINDIA #VIRATKOHLI #AUSTRALIA #CRICKET