'நாங்க ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போய்டுச்சே'...அவங்க ரெண்டு பேரோட அருமை... இப்போதான் தெரியுது!கலங்கிய கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 07, 2019 10:33 PM
Adelaide loss was the turning point of the series says Tim Paine

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை நாங்கள் எளிதாக வென்று விடுவோம் என நினைத்தோம்,ஆனால் இந்திய அணி எங்கள் கணக்கை பொய்யாகி விட்டார்கள்.மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்குறோம்,என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

 

.72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது,கோலி தலைமையிலான இந்திய அணி.ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

 

அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்று கசப்பான தோல்வியை சந்தித்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி.அதோடு 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் பாலோ ஆன் என பல்வேறு சோகமான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது 'இந்திய வீரர்கள் அனைத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியினை பெற்றிருக்கிறார்கள்.குறிப்பாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் மிகுந்த தெளிவுடன் தங்களின் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தியாவின் 3 வேகப்பந்து வீச்சாளர்களை சந்திப்பதற்காகவே எங்கள் பேட்ஸ்மேன்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஹாரிஸ், ஹெட் ஆகியோர் மிகுந்த நெருக்கடியுடன் தான் ரன்களை சேர்க்க வேண்டியிருந்தது.

 

அடிலெய்ட் டெஸ்ட்டில் நாங்கள் வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.ஆனால் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு,அனைத்தையும் இறுதி நேரத்தில் மாற்றி விட்டது.இந்த நேரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாதது அணிக்கு எவ்வளவு வெறுமையை அளித்திருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறோம் என வேதனையுடன் குறிப்பிட்டார்.

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #ADELAIDE #TIM PAINE