ஒரு நாளைக்குள் பதில் சொல்ல பிசிசிஐ உத்தரவு - பகிரங்க மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 09, 2019 04:52 PM

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் 4-வது டெஸ்ட் போட்டியின் போது பாண்ட்யா இணைந்தார்.

Hardik Pandya asks apology for controversial talks in TV programme

அதன் பின்னர், அண்மையில்  ‘காஃபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஹர்திக் பாண்ட்யாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர். அதில் சச்சின் மற்றும் கோலியை பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யா கூறிய பதிலால் சச்சின் ரசிகர்கள் கடுப்பாகினர்.  மேலும் பல எதிர்ப்பு கருத்துகளும் வரத் தொடங்கின.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், டிவி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஒரு நாளைக்குள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும், என Show Cause நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா, தான் அவ்வாறு பேசியதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, அனைவரிடமும் தான் மன்னிப்பு கோருவதாகவும், யாரையாவது எவ்விதமேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுவதாகவும் கூறியவர், தான் அவ்வாறு பேசியதற்கு எவ்வித நோக்கமும் இல்லை, குறிப்பாக யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

Tags : #HARDIKPANDYA #BCCI #SACHINTENDULKAR #VIRATKOHLI #TVPROGRAMME #VIRAL #BIZARRE #APOLOGY