'இங்கிலாந்துக்கு கூட நடக்குற மேட்ச்ல...கொஞ்சம் அடக்கி வாசியுங்க'! ஆஸ்திரேலிய அணிக்கு,'இந்திய வீரரின் ஸ்பெஷல் அட்வைஸ்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 08, 2019 08:24 PM
Kohli\'s 2019 Ashes advice for Australia

ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலிய அணிக்கு,இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருக்கிறது.இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு செல்ல இருக்கிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

 

நேற்றைய வெற்றிக்கு பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''நீங்கள் (ஆஸ்திரேலிய அணி) இங்கிலாந்திற்கு செல்வதற்கு முன்பு உங்களின் தலை கனத்தை இறக்கி வைத்திவிட்டு செல்லுங்கள்.நீங்கள் அவ்வாறு சென்றால் நிச்சயமாக,உங்களால் வெற்றி பெற முடியாது.ஏனென்றால், அங்கு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளச் சவாலானது. டியூக்ஸ் பந்துகள், உங்கள் ஈகோவை எளிதில் புதைத்துவிடும்.எனவே உங்களை கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்.

 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிச்சயம் பொறுமையுடன் விளையாட வேண்டும்.விக்கெட்டை இழந்தாலும் பொறுமையுடன் விளையாடினால் நிச்சயமாக நல்ல ரன்களை குவிக்க முடியும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #ASHES #AUSTRALIA