வெச்சு செஞ்ச சலூன்காரர்.. யூ-டியூப் வீடியோவால் ‘தலை’க்கு வந்த சோதனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 08, 2019 07:39 PM
barber shaves \'play button\' on customer\'s head after watching YouTube

ஸ்டைலிஷாக முடிவெட்டிக்கொள்ளும் விருப்பம் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் முடி திருத்தம் செய்பவரிடம் நாம் எம்மாதிரியான ஸ்டைலில் முடிவெட்டிக்கொள்ள ஆசைப்படுகிறோம் என்பதை சொல்வதும் முக்கியமான ஒரு விஷயம்தான். 

 

பலரும் சினிமா நடிகர்களைப் போல முடிவெட்டிக்கொள்ள வேண்டும் என கேட்பது உண்டு. சில சலூன்களிலேயே முடிவெட்டுவதற்கான மாடல்களை வைத்திருக்கவும் செய்கிறார்கள். 

 

ஆனால் சீனாவில்  ஒரு கஸ்டமர், பார்பர் கடைக்குச் சென்று தனக்கு எந்த மாதிரி முடிவெட்ட வேண்டும் என்று ஒரு வீடியோ மூலம் காண்பித்திருக்கிறார். அப்போது உடனே அந்த வீடியோவை ‘நிறுத்தி (PAUSE)’ செய்து காட்டி, இம்மாதிரிதான் தனக்கு முடிவெட்ட வேண்டும் என்று காட்டியுள்ளார். 

 

அந்த யூ-டியூப் வீடியோ நிறுத்தி (PAUSE) வைக்கப்பட்டபோது அதில் PLAY BUTTON இருந்துள்ளது. அந்த பட்டன் வீடியோவில் இருப்பவரின் தலையில் இருப்பதாக தவறாக புரிந்துகொண்ட சலூன் கடைக்காரர், கஸ்டமரின் தலையிலும் அதே மாதிரி PLAY BUTTON வைத்து முடிவெட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Tags : #BARBER #CUSTOMER #CHINA #YOUTUBE #VIRAL #TWEET