‘யாராச்சும் பசியா இருக்கீங்களா?’.. தீபிகா ரசிகர்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட்டின் சர்ப்ரைஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 04, 2019 04:15 PM
In Austin, people are eating Deepika Padukone as a dosa menu Viral pic

தென்னிந்தியாவின் பெங்களூருவில் பிறந்து ஹாலிவுட் வரை தடம் பதித்த நடிகை தீபிகா படுகோனாவின்  புகழ் தற்போது மென்மேலும் நீண்டுள்ளது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் வின் டீசலுடனான படமொன்றில் கடந்த வருடம், ஹாலிவுட் நடிகையாக அறிமுகமானார் தீபிகா படுகோனா. 

 

அவருக்கு உலகெங்கும் ஏகபோகமாக ரசிகர்கள் உருவாகி வருவதற்குச் சான்றாக மற்றுமொரு வைரலான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுதான் ஆஸ்டினில் உள்ள தென்னிந்திய உணவகத்தின் ‘தீபிகா படுகோனா தோசை’. தென்னிந்தியாவின் முக்கியமான உணவான தோசை, உலகெங்கும் பலராலும் விரும்பப்படுவதால், உலகம் முழுவதும் தென்னிந்திய உணவகங்கள் விரிந்துள்ளதோடு, அவற்றின் மெனுவில் தோசை கட்டாயமாகவே இருக்கிறது. 

 

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தோசா லேப்ஸ் என்கிற உணவகம் ஒன்று டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டின் என்கிற இடத்தில் பிரபலமாக இயங்கி வருகிறது. இங்கு தீபிகா படுகோனா தோசை என்று ஒரு ஸ்பெஷல் தோசை ரகம் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு மையலை உள்வைத்து, ஸ்பெஷலாக காரசாரத்துடனும் முறுகலாகவும் இருப்பதுதான் இந்த தோசையின் சிறப்பம்சம். 

 

இந்த உணவகத்தின் மெனு அடங்கிய புகைப்படத்தை, தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ‘யாராவது பசியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்கவும், அதற்கு தீபிகாவின்  கணவரும், புகழ்பெற்ற நடிகருமான ரன்வீர் சிங், ‘நான் சாப்பிட விரும்புகிறேன்’ என்று கூறுகிறார். அதற்கு தீபிகா, ‘அஃப் கோர்ஸ்.. தாராளமாக ரன்வீர்’ என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்களும் இந்த தீபிகா தோசையும் ட்ரெண்டிங்கில் உள்ளன.  

Tags : #DEEPIKAPADUKONE #RANVEERSINGH #VIRAL #TRENDING #TWEET #DOSA #SOUTHINDIANFOOD #DEEPIKAPADUKONEDOSA