'டெஸ்ட் தொடரா இல்ல,டெஸ்ட் போட்டியா'...பாவம் அவங்களே கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்க...'ஒரு ட்விட்டிற்காக பிரபல நடிகையை...கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 08, 2019 10:30 PM
Preity Zinta Trolled For Error In Congratulatory Tweet Post India Win

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி,72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 72 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக,ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

 

இதனால் இந்திய அணிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வெண்ணம் உள்ளது.பிரதமர்,குடியரசு தலைவர் என பல அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா இந்திய அணியினை வாழ்த்தி போட்ட ட்விட் தற்போது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

 

அவர் போட்ட ட்விட்டில் டெஸ்ட் தொடருக்கு பதிலாக,டெஸ்ட் போட்டி என்று பதிவிட்டு விட்டார்.இதை கண்ட ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள்.ஐபியலில் ஒரு அணியின் உரிமையாளருக்கு இந்த வித்தியாசம் கூடவா தெரியாது என கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.இதனையடுத்து, தன்னுடைய ட்விட்டர் பதிவு ட்ரோல் ஆவதை அறிந்த ப்ரீத்தி அதனை உடனே  நீக்கிவிட்டார்.

Tags : #BCCI #CRICKET #TWITTER #PREITY ZINTA #SYDNEY TEST #TROLL