'காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஆனார் 'திருநங்கை அப்சரா'... 134 வருட பாரம்பரிய கட்சியின்...முதல் திருநங்கை நிர்வாகி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 08, 2019 09:38 PM
Apsara Reddy Appointed Congress\'s First Transgender Office bearer

பத்திரிகையாளராகவும்,சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வந்த திருநங்கை அப்சரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்நிலையில் அவரை அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

 

134 வருட பழமையான காங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகியாக அப்சரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

அப்சரா கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்த அவர்,கட்சி இரண்டாக பிரிந்ததையடுத்து, அப்சரா சசிகலா கூட்டணியில் இணைந்தார்.தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவர்,முக்கியத்துவம் வாய்ந்த அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CONGRESS #RAHULGANDHI #APSARA REDDY