என்ஜின் இடுக்கில் ஆள் சிக்கியது தெரியாமல் வெகுதூரம் வந்த ரயில்.. நெல்லையில் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 17, 2019 03:11 PM

கோவையில் இருந்து திருநெல்வேலி வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் நபர் ஒருவரின் சடலம் சிக்கியிருந்தது தெரியாமலே ரயில் வந்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Dead man found hanging over the rail engine - A Bizarre incident in TN

கோயமுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமாக செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதனுடைய என்ஜின் முகப்பின் இடுக்கில் ஆண் ஒருவரின் சடலம் சிக்குண்டு இருந்ததை ரயில் நெல்லையை அடைந்தபோதே ஒவ்வொருவராக கவனித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் இந்த பரிதாபமான காட்சியை பார்த்துவிட்டு, உடனடியாக அருகில் இருந்த ரயில்வே போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் என்ஜினில் இருந்த சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த கோரமான சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணையினை மேற்கொண்ட போலீஸார், எக்ஸ்பிரஸ் ரயிலானது தாழையூத்தை கடந்த பிறகே அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று உறுதி செய்ததோடு, மேலும் ரயிலில் என்ஜினில் சிக்கிய நபர் யார், எந்த ஊர், அவர் உண்மையில் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது சடலமாக ரயில் தண்டவாளத்தில் கிடந்தவரா என்பன போன்ற விபரங்களை கண்டுபிடிக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #TRAINACCIDENT #TRAIN #RAIL #TIRUNELVELI #TAMILNADU #BIZARRE #DEAD #RAILENGINE