15 நாய்க்குட்டிகளை இரக்கமின்றி டார்ச்சர் செய்து கொன்ற சைகோ.. கலங்க வைத்த சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 14, 2019 10:36 PM

இரக்கமற்ற ஒரு சைகோ மனநிலையுடைய நபர் சுமார் 15  குட்டி நாய்க்குட்டிகளை கொன்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata - merciless psycho kills over 15 puppies in a hospital parking

எத்தனையோ விலங்கு நலவாரிய அமைப்புகள் வந்தபோதிலும், விலங்குகள் மற்றும் கால்நடைகளை துன்புறுத்தி அவற்றை கொலை செய்யும் கொடூரங்கள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நிகழ்ந்து வருகின்றன.

கொல்கத்தாவின் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் ஒன்றில் ரத்தம் வழிய வழிய சில மூட்டைகள் இருந்துள்ளன. அதில் ஒரு மூட்டையில் இருந்து சில நாய்க்குட்டிகள் வெளிவர முயற்சித்துள்ளன. அதைக்கண்ட ஊழியர் ஒருவர் மூட்டையை பிரித்து நாய்க்குட்டிகளை காப்பாற்றியுள்ளார். எனினும் மற்ற மூட்டைகளில் நாய்க்குட்டிகள் கொடூரமாக கொன்றுவைக்கப்பட்டிருந்த சம்பவம் அங்கு கூடிய பலரிரையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நாய்க்குட்டிகளை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போதுதான் நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுக்கபட்டு, கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதும், இதைச் செய்தவர் ஒரு சைகோ என்றும் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிசிடிவி கேமராக்களை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

Tags : #PUPPIES #DEAD #MERCILESS #KOLKATA