பாம்பிடம் இருந்து குட்டிகளைக் காப்பாற்றும் தாயின் பாசப்போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 20, 2018 05:35 PM
fierce fight between cobra and dog to save puppies

ஒடிசாவின் பத்ராக் எனும் இடத்தில் கடந்த வாரம் இரவு ஒரு நாய் குறைக்கும் சத்தம் கேட்டதை அடுத்து, அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சென்று பார்க்க, அங்குதான் ஒரு தாய் நாய் தன் குட்டிகளை ஒரு நாகப் பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

 

7 குட்டிகளுடன் இருந்த நாய் ஒன்று, ஒரு கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டின் கீழ்தளத்தில் பாம்பு ஒன்றிடம் இருந்த தன் குட்டிகளைக் காப்பாற்ற கடுமையாக போராட, நாகப் பாம்பின் அருகில் இருந்த இரண்டு குட்டிகள் இறந்துள்ளன.

 

இருப்பினும், மீதமிருந்த குட்டிகளையாவது எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று முயன்றபோது தொடர்ந்து நாகப்பாம்பு சீறிக்கொண்டே இருந்ததையும், அந்த பாம்பை பார்த்து பயந்த குட்டிகளையும், பதற்றமடைந்த தாய் நாயையும் அங்கிருந்தவர்கள் படம் பிடித்ததோடு, பாம்பினை அடக்கும் இரும்பு ஸ்டிக் ஒன்றை வைத்து அங்கிருந்த ஒருவர் பாம்பை பிடித்தார்.

Tags : #SNAKE #COBRA #DOG #PUPPIES