நாயைக் காப்பாற்ற 'ஏரிக்குள்' குதித்த அதிபரின் மனைவி

Home > News Shots > தமிழ்

By |
Brazil\'s First Lady Jumped In Lake To Rescue Her Pet Dog

பிரேசில் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவி மார்சிலா தனது மகனுடன் பங்களாவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர்களுடன் வளர்ப்பு நாய்களான  பிக்கோலி, தோர் இரண்டும் உடன் நடந்து வந்தன. அதில் பிக்கோலி, என்ற நாய் அருகில் இருந்த ஏரிக்குள் குதித்து விளையாடியது. ஆனால், அதனால் நீந்தி மீண்டும் கரையை அடைய முடியவில்லை.

 

இதனைப்பார்த்த மார்சிலா சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ஏரிக்குள் குதித்து, அந்த நாயை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில்அந்த நாயை உரிய நேரத்தில் ஏரிக்குள் குதித்துக் காப்பாற்றாத பாதுகாவலரையும், மார்சிலா இடைநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம், தற்போது தான் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #BRAZIL #DOG

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil's First Lady Jumped In Lake To Rescue Her Pet Dog | தமிழ் News.