செல்போன் பாஸ்வேர்டை போட்டுத்தர மறுத்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 18, 2019 08:43 PM

செல்போன் பாஸ்வேர்டை தர மறுத்ததால் கணவரை மனைவியே உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் இந்தோனேசியாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

wife sets her husband on fire for not telling his cellphone password

இந்தோனேசியாவின் நூசா தெங்காரா பகுதியில் 26 வயது டெடி புர்ணமா என்கிற நபர் தனது 25 வயதான இல்ஹம் ஹயானா என்பவருடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று டெடி தனது வீட்டுக்கூரையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அவரருகே வந்த அவரது மனைவி ஹயானா, டெடியின் செல்போனை எடுத்து நீட்டி, பாஸ்வேர்டை போட்டுத் தரும்படியாக டெடியிடம் கேட்டுள்ளார். 

ஆனால் பாஸ்வேர்டை டெடி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஹயனாவுக்கும் டெடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. சண்டையில் ஹயானாவை அடிக்க வந்த டெடியின் மீது ஹயானா அருகில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி லைட்டரை தூக்கி வீசி கொளுத்தியுள்ளார். 

இதனை அடுத்து பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி டெடி உயிரிழந்ததை அடுத்து ஹயானாவை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Tags : #SMARTPHONE #FIREACCIDENT #INDONESIA #BIZARRE #HUSBAND #WIFE #CELLPHONE #PASSWORD