'மகளே இப்படி செய்யலாமா'?...பெற்ற மகளினால் தந்தைக்கு நிகழ்ந்த அவலம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 14, 2019 03:02 PM

சொத்து தகராறு காரணமாக சொந்த மகளே தந்தையை அடியாட்களை வைத்து வீட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Clash Between Father and Daughter in Hosur for Propriety issues

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ்.இவருக்கு ராஜ்குமார் மற்றும் பாபு ஆகிய 2 மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர் இவர்களுக்கு திருமணமாகி அவர் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.தனராஜின் மனைவி கடந்த 2008ஆம் ஆண்டு இறந்து விட்ட நிலையில்,அமெரிக்காவில் வசித்து வரும் மகளின் வீட்டிற்க்கு அவ்வப்போது சென்று வருவார்.மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர்,அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில் மூவேந்தர் நகர் பகுதியில் தனக்குசொந்தமான வீட்டினை,சொந்த காரணங்களுக்காக மகள் தனலட்சுமிக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்துள்ளார்.இதனிடையே தன் மகளுக்கு தானமாக எழுதி கொடுத்த அந்த சொத்தின் பதிவை ரத்து செய்து விட்டதாக கூறியதுடன்,இனிமேல் இந்த சொத்தின் முழு உரிமையும் தனக்கு மட்டும் தான் என அந்த வீட்டில் வந்து குடியேறினார் தனராஜ்.இதனை சற்றும் எதிர்பாராத அவரது மகள் தனலட்சுமி அவ்வப்பொழுது  தனது தந்தையிடம் வந்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே இன்று காலை பிரச்சனைக்குரிய வீட்டில் இருந்த தன்ராஜை அவரது மகள் தனலட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோருடன் வந்த ஆட்கள் சேர்ந்து,குண்டுகட்டாக தன்ராஜை வெளியேற்றினர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவர் வசித்து வந்த அறையிலிருந்த சோபா நாற்காலி மருந்துகள் உள்ளிட்ட பொருட்களும் தெருவில் வீசப்பட்டது.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து பேசிய தனராஜ் 'இந்த சொத்து தனக்கு சொந்தமானது. இது தொடர்பாக நான் நீதி போராட்டம் நடத்த தயாராக  இருந்த நிலையில்,மகள் ஆட்களை வைத்துக்கொண்டு என்னை 80 வயது முதியவர் என்றும் பாராமல் குண்டுகட்டாக வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வெளியே வீசி இருக்கிறார்கள்' என தெரிவித்தார்.இது சம்பந்தமாக அவரது மகள் மற்றும் மருமகன் கூறுகையில் 'எங்களுக்கு அப்பாவின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும்,அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் நாங்கள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.

சொத்து தகராறு காரணமாக சொந்த மகளே தந்தையை அடியாட்களை வைத்து வீட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

Tags : #CLASH #FATHER #DAUGHTER #KRISHNAGIRI #HOSUR