’படத்தில் இந்தந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை’.. பாராட்டிய துணை கமிஷனர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 17, 2019 05:21 PM

சென்னையில் உள்ள தலைமையிட கமிஷனர் அலுவலகத்தின் துணை கமிஷனர் அர்ஜூன் சரவணன் விஸ்வாசம் படத்தை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதோடு, குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக வெகுவாக பாராட்டியுள்ளார். 

Chennai deputy commissioner praises viswasam movie for these things

‘சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது’ என்று கூறியவர் அந்த காட்சிகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, ‘படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது’ உள்ளிட்ட காட்சிகளை பாராட்டியுள்ளார். 

மேலும், இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே தனது அவா என்று கூறியவர்,  விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

Tags : #CHENNAI #ARJUNSARAVANAN #VISWASAM #AJITHKUMAR #NAYANTHARA #DIRECTORSIVA #ROADRULES #HELMET #SEATBELT