'மெரினாவில் குதிரை சவாரிக்கு...சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'... தோழியின் செயலால் அதிர்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 22, 2018 08:31 PM
Teenage girl sexually abused in Chennai Marina

மெரினாவில் குதிரை சவாரிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம்,கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை முகப்பேறு பகுதியில் 16 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் தோழிகளாக பழகி வந்தார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரைக்கு வந்த இருவரும் குதிரை சவாரி செய்துள்ளனர்.அப்போது 13 வயதுச் சிறுமியை சிறிது நேரம் காணவில்லை.சிறிது நேரம் கழித்து வந்த அந்த சிறுமி சற்று தளர்வாக இருந்துள்ளார்.இதனையடுத்து இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

 

வீட்டிற்கு சென்ற பின்பு 13 வயதுச் சிறுமி திடீரென மயக்கமடைந்துள்ளார்.இதனால் பதறிபோன பெற்றோர் அவரை  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.மருத்துவர்கள் பெற்றோரிடம் உங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

 

இந்நிலையில் என்ன நடந்தது என சிறுமியிடம்பெற்றோர்  விசாரித்தனர்.அப்போது குதிரை சவாரியின் போது நடந்த விவரங்களைத் தெரிவித்தார். அதோடு குதிரை சவாரிகாரர், தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றதையும் கூறினார். உடனடியாக அரசு மருத்துவமனையிலிருந்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மகளிர் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்.

 

அப்போது குதிரை சவாரி நடத்தும் நபர் தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததை வாக்குமூலமாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.மேலும் அவருடன் வந்த 16 வயதுச் சிறுமிக்கும் குதிரை சவாரி ஓட்டும் நபருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது. 

இதனால் தான் குதிரை சவாரிக்காரரை நம்பி 13 வயதுச் சிறுமி சென்றுள்ளார். மேலும் 13 வயதுச் சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.மருத்துவரின் பரிசோதனைக்கு பின்புதான் சிறுமிக்கு நடந்த கொடூரம் வெளியில் தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து குதிரை சவாரி ஓட்டும் செல்வம் என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் அவருடன் வந்த 16 வயதுச் சிறுமியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மெரினாவில்  சிறுமிக்கு நடந்த கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #CHENNAICHILDABUSE #MARINA #CHENNAI