இது ‘தல’ கலக்கும் மாஸ் ‘பேட்ட’ வெர்ஷன் .. ட்விட்டரில் ட்ரெண்டாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 10, 2019 02:33 PM

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Mass Petta Starring MS Dhoni - Fan made video goes viral on air

படத்துக்கு முன்னதாக வெளியான ட்ரெய்லர் அனைவரிடையே உற்சாகத்தையும் உருவாக்கியது. இந்நிலையில் அதே ட்ரெய்லரினை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘தல’யுமான எம்.எஸ்.தோனியை மையமாக வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இது தல, எம்.எஸ்.தோனியின் பேட்ட வெர்ஷன்’ என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவினை கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டுப் போட்டியை எதிர்கொண்டு வெற்றியடையும் சூழலுக்கு ஏற்ப காட்சித் துண்டுகளை கட் செய்து இணைத்திருக்கிறார்கள். இதனை ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாகும் இதே நாளில் பேட்ட படத்தையும் ரஜினியையும் கொண்டாடும் வகையில் வெளிவிட்டுள்ளார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸின் அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு அனைவராலும் ரி-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் தலைமையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #PETTA #MSDHONI #VIRALVIDEO #FANMADE #CHENNAISUPERKINGS #CRICKET #IPL2019 #RAJINI #PETTAPARAAK #WHISTLEPODU #FANMADEYELLOV