உற்சாகத்தில் பள்ளி மாணவியருடன் சேர்ந்து நடனமாடும் எம்.பி.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 07, 2019 06:05 PM
Maharashtra MP Dances along with school students in viral video

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடும் காட்சி இணையத்தில் அனல் பறக்கும் வீடியோவாக வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் பந்த்ரா- கோண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மதுக்கர் குகாடே, அப்பகுதியின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மாணவியர் கலைநிகழ்ச்சியும் இருந்தது. அப்போது எம்.பி திடீரென பரவசம் வந்ததுபோல் ஆடத் தொடங்கினார்.

 

உடனே மேடையில் இருந்தவர், கலைநிகழ்ச்சியில் ஆடிவிட்டு கீழே அமர்ந்திருந்த மாணவிகளையும் உடன் வந்து ஆடுமாறு அழைக்கிறார். ஒரு மாணவி எழுந்துவந்து ஆடத் தொடங்குகிறார். உடனே அனைவரும் பரவசமாகி கத்தியும் கைத்தட்டியும் ஆர்ப்பரிக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து அம்மாணவியுடன் எம்.பி சேர்ந்து நடனமாட, மேலும் இரண்டு மாணவியர் வந்து ஆட்டத்தில் சேர்ந்துகொள்கின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு மாணவியருடன் சேர்ந்த உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIRALVIDEO #MP #MAHARASHTRA #SCHOOLGIRLS #DANCE #PROGRAMME #CULTURALPROGRAMME #STUDENTS